தோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி!

Share this News:

இஸ்லாமாபாத் (18 ஆக 2020): தோனி ஓய்வு அறிவித்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நபர் வீட்டில் அமர்ந்து ஓய்வை அறிவிப்பது சரியான முடிவல்ல. சச்சின் ஓய்வு முடிவினை அறிவிக்க இருக்கும் போதும் அவரிடம் இது குறித்து கூறியுள்ளேன். எனவே தோனியும் அவ்வாறு செய்திருந்தால் நான் உட்பட அனைவரும் மிகவும் சந்தோசப்பட்டிருப்போம். இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான்” என்றார்.


Share this News:

Leave a Reply