சோகத்தில் தோனி ரசிகர்கள்!

புதுடெல்லி (15 ஆக 2020): சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், முன்னாள் கேப்டன் தோனி.

இதுகுறித்த்உ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2004 ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, வங்க தேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் 2005-இல் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி 148 ரன்கள் குவித்து கவனம் பெற்றார்.

அதே ஆண்டில் இலங்கையுடன் நடந்த போட்டியில் 183 ரன்களை எடுத்த தோனி அணியில் தனது இடத்தை மேலும் வலுவாக்கினார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, 2007 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய காலகட்டத்தில் தோனி உள்பட பல இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அந்த ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பை தொடரில், டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாடாத நிலையில், இளம் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது தோனிக்கு அதிக பாராட்டுகளை பெற்றுத் தந்தது.

2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது அவரது தலைமைக்குப் பாராட்டுகளை தந்தது.

2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. .2010 மற்றும் 2016 ஆகிய இருமுறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில் தான்.

இவை ஒருபுறமிக்க, உலக அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் வெகுவாக புகழப்பட்டது.

ஹாட் நியூஸ்: