ஒன்றிய அரசு என்பதற்கு நடிகர் வடிவேலு அவரது பாணியில் பதில்!

686

சென்னை (14 ஜூலை 2021): நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (14.07.2021) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாயை வழங்கினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கொங்கு நாடு குறித்த கேள்விக்கு, ”நல்லா இருக்கிற தமிழ்நாட்டைப் பிரிக்காதீர்கள். தற்போது நடைபெறும் ஸ்டாலினின் ஆட்சியைக் கலைஞர் இருந்து பார்த்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு ஆட்சி இருக்கிறது” என்றார்.

மேலும் ஸ்டாலின் ஆட்சி குறித்து பேசுகையில், ”உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு கொரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

மேலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்த கேள்விக்கு, ”இதற்கு அன்றே முதல்வர் விளக்கமளித்துவிட்டார். உங்களுக்கு மறுபடியும் டவுட் என்றால் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என அவரது பாணியில் பதிலளித்தார்.

மேலும் அதிக படங்கள் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”நல்லதே நடக்கும்” என்றார்.