வெற்றி பெற்றார் கட்சி மாறினார் – பத்தே நிமிடத்தில் நடந்த பரபரப்பு!

307

மதுரை (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட மேலூர் நகராட்சி 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சந்திர பிரபு வெற்றி சான்றிதழை வாங்கிய 10 நிமிடத்தில் திமுகவில் சேர்ந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.