பாஜக கூட்டணியாலத்தான் தோற்கப்போறோம் – கண்ணீர் விடும் அதிமுகவினர்!

657

சென்னை (22 மார்ச் 2021): தமிழகத்தில் பாஜகவில் சிக்கித் தவிப்பதால்தான் தோல்வியை சந்திக்கபோவதாக அதிமுகவினர் குமுறுகின்றனர்.

பாஜக அரசின் இந்தி திணிப்புகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விவசாய சட்டம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே உறுதியாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் தோல்வியை சந்திக்கும் என்கின்றனர் திமுகவினர்.

மேலும் அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா என பல கட்சிகள் இருந்தாலும், பாஜக மட்டும் மிரட்டி கொண்டிருக்கிறது.. பாஜக நிர்வாகிகள் மிரட்டல் தோரணையில்தான் அதிமுகவினரிடமே பேசுகிறார்கள்.. தங்கள் கையில் ஆட்சி இருக்கிறது என அதிமுக நிர்வாகிகளை மிரட்டி காரியம் சாதிக்கிறார்கள். அதுபோலத்தான் முதல்வரையும் மிரட்டி, கூட்டணி அமைத்துக்கொண்டு சீட்டுகளையும் கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள்… ஒரு சீட்கூட பாஜக ஜெயிக்காது..” என்கின்றனர்