எம்ஜிஆர் நினைவுகளில் அன்வர் ராஜா – கட்சியை விட்டு விலக்கியதால் வருத்தம்!

366

இராமநாதபுரம் (25 டிச 2021): தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா தெர்வித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா பெயரில் இராமநாதபுரம் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

அந்த சுவரொட்டிகளில், ‘தலைவா… கட்சியில் இருந்து விலகி இருக்க முடியவில்லை, தினமும் உன்னை நினைக்கிறேன், அதில் நான் என்னை மறக்கிறேன்’ எனும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்வர் ராஜா, தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது எனக் கூறினார். அவருடன் உறவாடிய தருணத்தை நினைத்து வாழ்வதாகவும் தெரிவித்தார்.