சென்னை ஷஹீன் பாக் – தொடரும் 8 வது நாள் போராட்டம் -வீடியோ

573

சென்னை (21 பிப் 2020): சென்னை ஷஹீன் பாக் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் போராட்டம் மேலும் வீரியம் அடைந்துள்ளது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தொடர் போராட்டம் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடரும் என்று போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.