வீட்டில் பிரசவம் – குழந்தை மரணம்!

325

கோவை (07 டிச 2021): வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை செட்டிவீதியில் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி.

விஜயகுமார் – புண்ணியவதி தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந் த நிலையில் 4-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் தொடர்பாக அலட்சியப் போக்கே இருந்து வந்துள்ளது. புண்ணியவதியும் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.

நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலி எடுத்ததும் மருத்துவமனைக்குச் செல்லாமல், வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் (Children Health Alert) தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

பிரசவமான சற்று நேரத்தில், குழந்தையும், தாயும் மயக்கமடைந்தனர். அதன் பிறகுதான் தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சரியாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.