கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு!

450

சென்னை (23 ஜூலை 2020): கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தமிழகத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், கலை அறிவியல் கல்லூரி முதுகலை படிப்புகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.

அதேவேளை மாணவர்களின் அரியர்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், மாணவர்கள் தங்களது அரியர் பேப்பர்களை, கல்லூரி திறக்கும் போது தேர்வு நடத்தப்பட்டு எழுத வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

அரியர்ஸ் அல்லாத நடப்பு செமஸ்டர் பாடங்களுக்கு எப்படி மதிப்பெண் அளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை அடுத்தே இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.