தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

369

சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது.

அதிகபட்சமாக சென்னையில் 180 பேரும், கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், திருவள்ளூரில் 37 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 38-வது நாளாக நேற்று 726 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்து 73 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 10 ஆயிரத்து 428 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 588 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 365 பேர் முதல் முறையாகவும், 55 ஆயிரத்து 877 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.