கோர விபத்து – திமுக எம்.எல்.ஏ.மகன் உட்பட 7 பேர் பலி!

877

பெங்களூரு (31 ஆக 2021): கர்நாடகாவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த, சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது. இதுதவிர, கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

இந்த காரை எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டியுள்ளார் என்றும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.