Home தமிழகம் திமுக காங்கிரஸ் விரிசல் - துரை முருகன் பரபரப்பு தகவல்!

திமுக காங்கிரஸ் விரிசல் – துரை முருகன் பரபரப்பு தகவல்!

வேலூர் (15 ஜன 2020): திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,“தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

இதிலிருந்து என்னத் தெரிகிறது என்றால், விவசாயிகள் பள்ளம் எடுத்ததைத் தூர்வாரியதாக கணக்குக்காட்டி கொள்ளையடித்தனர். சென்னை புத்தக கண்காட்சியில், தமிழக அரசின் ஊழல் குறித்து புத்தகம் வைத்த பத்திரிகையாளரை கைதுசெய்தது, ஜனநாயக நாட்டில் அரங்கேறும் செயல் இல்லை.

இதைப் படிச்சீங்களா?:  திமுக கூட்டணியில் புதிதாக இணையவுள்ள அந்த இரண்டு கட்சிகள்!

ஊழலை மறுத்திருக்கலாம். தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றால் எங்களுக்குக் கவலையில்லை. அதனால், எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸுக்கு ஓட்டு கிடையாது. அவர்கள் விலகுவதைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை’’ என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க-வை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் துரைமுருகனின் பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

உங்களுடன் வாசிப்பவர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – வாகனங்கள் மெதுவாக செல்ல உத்தரவு!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின்...

காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம் – இஸ்ரேல் தூதரின் எதிர்வினைக்காக வெட்கப்படுகிறேன் – நடவ் லாபிட்,!

புதுடெல்லி (02 டிச 2022): இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளரும் IFFI ஜூரி தலைவருமான நடவ் லாபிட், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த தனது கருத்துக்கு இந்தியாவுக்கான தனது நாட்டு தூதரின் எதிர்வினை...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள்...

டிசம்பர் 6 அன்று மதுரா மசூதியில் ஹனுமான் வேதம் ஓத திட்டம் – 16 பேர் மீது வழக்குபதிவு!

மதுரா (02 டிச 2022): டிசம்பர் 6 அன்று மதுரா ஷாஹி ஈத்கா மசூதிக்குள் ஹனுமான் வேதம் ஓத இந்து அமைப்பினர் விடுத்த அழைப்பை அடுத்து, மதுரா நகர மாஜிஸ்திரேட் அந்த அமைப்பில்...