வேலூரில் நிலநடுக்கம்!

658

வேலூர் (29 ஆஆ 2021): வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  சிரமத்தை தவிற்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதளம்!

இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.