துபாய் ஹோட்டலில் நடந்தது என்ன? – பெண்களுக்கு எதிரான அண்ணாமலை – விளாசும் காயத்ரி ரகுராம்!

Share this News:

சென்னை (04 ஜன 2023): தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான பாலியல் சர்ச்சை புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். அன்றுமுதல் தமிழக பாஜக பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார் காயத்ரி ரகுராம்.

பாஜக-வில் இருந்து விலகிய நிலையில் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் காயத்ரி ரகுராம்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரகசியமாக ஐந்து வார் ரூம்களை உருவாக்கி, பாஜகவின் நிர்வாகிகளுக்கு எதிராகவே ரகசியமாக பதிவு செய்து வருகிறார். தேவைப்படும்போது இவற்றைப் பற்றி ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார். இதன் எல்லா பின்னணியிலும் அண்ணாமலை இருக்கிறார்.”

“பாஜகவின் மூத்த நிர்வாகிகளான சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இல.கணேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக அண்ணாமலை எடுத்துவரும் செயல்பாடுகளுக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

துபாய் ஹோட்டலில் நடந்தது குறித்து என் மீது அசிங்கமான குற்றச்சாட்டுகளை, கமலாயத்தில் 150 பேர் முன்னிலையில் அண்ணாமலை வைக்கிறார் . ஒரு பெண் மீது பொதுவில் இப்படித்தான் குற்றச்சாட்டுகள் வைப்பதா? இதுதான் கட்சி பெண்களுக்கு அண்ணாமலை கொடுக்கும் மரியாதையா?

நான் துபாய்க்கு மூன்று நிர்வாகிகளுடன் சென்றேன். அங்கு என்ன நடந்தது என்று அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். ஆக உளவு வேலை பார்க்கிறாரா?

துபாய் ஹோட்டல் குறித்த குற்றச்சாட்டுக்கு நான் விசாரணை நடத்த வேண்டி கோரியிருந்தேன். ஆனால் தமிழக பாஜகவிலிருந்தும், டெல்லியிலிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே பாஜகவிலிருந்து விலகுவதைத் தவிர வேறு இல்லை என்பதாலேயே விலகும் முடிவை அறிவித்தேன்.” என்றார்.

மேலும், “என்னுடன் நேரடியாக பேசி பிரச்சனைகளை சரி செய்துகொள்ள கோரியிருந்தேன் அதற்கும் அண்ணாமலைக்கு தைரியம் இல்லை, ஏன் என்னை அவர் சந்திக்க மறுக்கிறார்? ஏன் என்னுடன் விவாதிக்க மறுக்கிறார்?”

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply