திருச்சி எஸ்.ஐ.படுகொலை – ஜவாஹிருல்லா பரபரப்பு அறிக்கை!

530

சென்னை (21 நவ 2021): திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் திருடர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மமக தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.,

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணியாற்றி வரும் பூமிநாதன் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினால் அரிவாளால்சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

இரவு பகல் என்று பாராமல் உயிருக்கும் மேலாகக் கடமையை நேசித்து பணியாற்றிய பூமிநாதன் அவர்களின் தியாகம் உன்னதமானது. அவரது கடமையுணர்வும் தியாகமும் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைப் படிச்சீங்களா?:  ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழாவண்ணம் முன்மாதிரியானநடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை உயர் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.