சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் சாபம் – காங்கிரஸ் எம்பி காட்டம்!

சென்னை (04 பிப் 2021): சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் வரமல்ல சாபம் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவு பலரையும் அவருக்கு எதிராக பேசவைத்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும் போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பானி,அடக்குமுறை அரசின் அடிமைகள் என்றும் சச்சினை ஜோதிமணி கடுமையாக சாட்டியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...