பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

681

சென்னை (26 அக் 2021): சமூக வலைத்தளங்களில் அருவருக்கத் தக்கவகையில் எழுதிவரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசிய புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்

இது இப்படியிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து பாஜக பிரமுகரான கல்யாணராமன் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்திருந்தார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

இதைப் படிச்சீங்களா?:  மழை விட்டும் தூரல் விடாத கதைதான் தக்காளியின் விலை!

இது தொடர்பாகத் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமாரின் உதவியாளர் சந்தோஷ் சென்னை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த அக். 16ஆம் தேதி இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கச் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.