விவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்!

391

ஜலந்தர் (21 செப் 2020):

“வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் விவசாயிகள் தீவிரவாதிகள்” என்று நடிகை கங்கனா ரானாவத் பகிரங்கமாக விமர்சனம் வைத்துள்ளார்.

வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பு நடத்தினால், தோற்கடிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது. பஞ்சாப் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், ” வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் விவசாயிகள் தீவிரவாதிகள். இதே தீவிரவாதிகள்தான் சிஏஏ-வினால் யாரும் குடியுரிமையை இழக்காதபோது, ரத்தம் சிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது.