எச்.ராஜாவா? எல் முருகனா? – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

ராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வரும், திமுக சார்பில் முக ஸ்டாலினும், இன்னும் பல கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அது போலவே பாஜக சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக சார்பில் வந்த எச். ராஜா, நயினார் நாகேந்திரன், மாநில தலைவர் எல்.முருகனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பொதுவாக தலைவர்களுக்கு நினைவிடத்தின் நிர்வாகிகள், துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், தினகரனுக்கும் மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.

ஆனால், பாஜகவில் மொத்தம் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.. அப்போது மாநில தலைவர் எல்.முருகனை விட்டுவிட்டு , கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத பாஜகவின் எச்.ராஜாவிற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இதனை பார்த்த எல்.முருகன் உடனே அங்கிருந்து திரும்ப முயன்றுள்ளார்.. இதை கவனித்துவிட்ட நயினார் நாகேந்திரன் பூசாரியிடம் இன்னொரு துண்டை வாங்கி, முருகன் கழுத்தில் போட்டு அவரை சமாதானம் செய்துள்ளார் . இதனால் அந்த இடம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும்...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு...

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்...