பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? – தமிழக கல்வித்துறை அமைச்சர் தகவல்!

1123

சென்னை (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என தமிழக அரசு முன்னமே அறிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

இதனிடையே 10ம் வகுப்புகளுக்கு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் மே 3ம் தேதிக்கு பின்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.