கீழக்கரை திமுக கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தவில்லை – சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்!

ராமநாதபுரம் (30 நவ 2022): ராமநாதபுரத்திலிருந்து கடத்தப்பட்ட பொருள் போதைபொருள் அல்ல என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்திகள் வெளியாகின.

இதனை பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட, பல பாஜக பிரமுகர்களும் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராகவும், கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தியதாகவும் பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஹாட் நியூஸ்:

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...

அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான...

பாஜகவுடன் இணைவதைவிட சாவதே மேல் – நிதிஷ்குமார்!

பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார். முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக...