சட்டசபைக்கு வித்தியாசமாக வந்த தமிமுன் அன்சாரி!

சென்னை (06 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் விதமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகை MLA-வும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி இன்று கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். மேலும் அவரது உடையில் CAA, NPR, NRC வேண்டாம் என குறிக்கும் வகையில் (NO CAA, NPR, NRC-என) எழுதப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூடியதும், தனது கையில் தேசியக்கொடியுடன் வெளிநடப்பு செய்த தமிமுன் அன்சாரி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினார். அவரது முழக்கங்கள் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இன்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் துவங்கியது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் அளித்தார். அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர்கட்சிகள் புகார்!

கவுஹாத்தி (05 டிச 2020;): மத ஒற்றுமையை சீர்குலைப்பதாகக் கூறி அஸ்ஸாம் எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர் கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளன. இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு...