ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்!

நாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 27,674 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 933 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆனால் நாகை மட்டும் அதற்கு விதிவிலக்காக சாதாரணமாக உள்ளது. நாகையின் முக்கிய வீதிகளில் மக்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். இவர்களுக்கு கொரோனாவின் வீரியம் தெரியவில்லையா? அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லையா? என்பதே தற்போதைய கேள்வி.

ஹாட் நியூஸ்: