புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து – 4 வது எம்.எல்.ஏ ராஜினாமா!

440

புதுச்சேரி (16 பிப் 2021): புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருவதால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். பின்பு அவர்கள் பாஜகவில் இணைந்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். .

இதைப் படிச்சீங்களா?:  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. இதனால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.