வங்கக்டலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் ஜாவீத்!

Share this News:

சென்னை (02 டிச 2021): வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு ‘ஜாவித்’ என பெயரிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை.

அதற்குள், அடுத்த புயல் சின்னம் குறித்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், புயலாக வலுப்பெற்று ஆந்திரா- ஒடிசா இடையே டிசம்பர் 4-ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘ஜாவித்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவூதி அரேபியா வழங்கிய பெயராகும்.


Share this News:

Leave a Reply