தமிழ் நாட்டில் நீட் தேர்வு வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் தகவல்!

சென்னை (07 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் நடத்தக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ள குழு, வரைவறிக்கை தயார் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதிக்கு பின்னர், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவிதார்.

பள்ளி, கல்விக்கட்டணம் குறித்தும் அந்த குழு தாக்கல் செய்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் , 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு தரும் பரிந்துரை அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .

ஹாட் நியூஸ்: