அமைச்சர் துரை முருகனுக்கு எதிராக பஸ் ஊழியர்கள் போராட்டம்!

Durai Murugan
Share this News:

தஞ்சாவூர் (02 அக் 2021):மூத்த அமைச்சரான துரைமுருகன், வேலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், ‘நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துள்ளோம். பெண்கள் பஸ்சில் ஏறியதும், அப்படிப் போய் உட்காரு என கண்டக்டர்கள் கூறுகின்றனர்.

‘அப்படிப்பட்டவர்களை, பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும். அரசு பஸ் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா… பெண்களை தரக்குறைவாக நடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுவோம்’ என்றார்.

தங்களை கேவலப்படுத்தி பேசிய துரைமுருகனை கண்டித்து, தஞ்சையில் உள்ள ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில், நேற்று காலை 5:00 மணி முதல், டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்..

அதில், தி.மு.க.,வின் தொ.மு.ச., உட்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தி பஸ்களை இயக்க வைத்தனர்.


Share this News:

Leave a Reply