மாணவர்களுடன் ஆட்டம் போட்ட ராகுல் காந்தி!

404

சென்னை (01 மார்ச் 2021): காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மாணவர்களுடன் குதூகலமாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபாட்டுள்ளார். அப்போது மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் ராகுல் காந்தி நடனமாடினார். ராகுல் ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடினார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுடன் விளையாட்டிலும் ஈடுபட்டார்.

சமீபத்தில் ராகுல் காந்தி கேரளாவில் மீனவர்களுடன் கடலுக்குச் சென்று கடலில் நேரத்தை கழித்தது குறிப்பிடத்தக்கது.