சசிகலாவுக்கு கொரோனா? – மருத்துவமனையில் அனுமதி!

288

பெங்களூரு (20 ஜன 2021): பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திடீரென காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சாதாரண சுவாச கோளாறு தான் என தெரிவித்தனர். இதனை அடுத்து , பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  புதுச்சேரி ஆட்சி கலைப்பு பாஜகவுக்கு நெருக்கடியா?

சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.