ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்!

1476

சென்னை (31 அக் 2021): நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார்.

ரஜினி நடித்த அண்ணாத்தே படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.