இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

454

சுமத்ரா (03 ஆக 2021): இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தெற்கே சுமத்ராவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மென்டவாய் தீவு அருகே சுங்கா பெனு நகரின் தென்மேற்கே 191 கி.மீ. தொலைவில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.