தமிமுன் அன்சாரி எம்எல்ஏ திமுகவுக்கு ஆதரவு!

Share this News:

சென்னை (11 மார்ச் 2021): மனித நேய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும் அக்கட்சி திமுகவுக்கு ஆதரவளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply