இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

Share this News:

கராச்சி (09 மார்ச் 2022): 1999 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி சென்ற IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களில் ஒருவரான மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி என கருதப்படும் மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் , மார்ச் 1 அன்று கராச்சியின் அக்தர் காலனியில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானம், 179 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன், நேபாளத்தில் இருந்து 5 பயங்கரவாதிகளால் டிசம்பர் 24, 1999 அன்று கடத்தப்பட்டது. விமானம் அமிர்தசரஸ், லாகூர் மற்றும் துபாய்க்கு விமானம் பறந்தது.

விமானம் கடத்தல்காரர்கள் பிடியில் இருந்தபோது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாரில். கடத்தல்காரர்கள் 25 வயதான ரூபின் கத்யால் என்ற பயணியை கொலை செய்தனர்.

அப்போது தலிபான்கள் இந்திய சிறைகளில் இருந்த பயங்கரவாதிகளான மசூத் அசார் அல்வி, சையது உமர் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகியோரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் விமான கடத்தல் முடிவுக்கு வந்தது.

மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் ரூபின் கட்யாலை கொலை செய்தவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply