பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி!

259

பாரிஸ் (29 அக் 2020): பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான்.

இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.