லண்டனில் மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொலை!

488

லண்டன் (02 பிப் 2020): மர்ம நபர் ஒருவனை லண்டன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

லண்டன் ஸ்ட்ரெட்ஹாம் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் தொடர்புடையவர்கள் வேறு யாரும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இன்று, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.