ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பைசர் தடுப்பூசி – ஆய்வாளர்கள் தகவல்!

361

நியூயார்க் (14 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனாவுக்கு எதிராக சிறந்து செயல்படுவதாக தென்னாப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில், இரண்டு தவணை ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருந்த 70 சதவிகிதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு பாதிப்பை இந்த தடுப்பூசி தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  ஐரோப்பாவில் முடிவுக்கு வரும் கொரோனா தொற்று!

மேலும் 33 சதவிகிதம் தொற்றே ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது. தடுப்பூசி செயல்பாட்டில், வயது அடிப்படையில் சிறிது மாறுபாடு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்ரிக்காவில் ஒமிக்ரானை கட்டுப்படுத்துவதில், ஃபைசர் தடுப்பூசி பெரிதும் உதவும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.