மோடியின் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் – வங்க தேசத்தில் வலுக்கும் போராட்டம்!

950

டாக்கா (03 மார்ச் 2020): இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வங்க தேச அரசை எதிர்த்து டாக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லியில் சென்ற வாரம் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வங்க தேசத்தின் தந்தை என அழைக்கப்படும் சேக் முஜிபுர் ரஹ்மானின் 100 பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக வங்க தேசத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு வங்க தேச அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் மார்ச் 17 ஆம் தேதி மோடி வங்க தேசம் செல்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்க தேசம் டாக்காவில் சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.