அமெரிக்காவில் சியாட்டில் நகரில் மாணவருக்கு கொரோனா வைரஸ்!

சியாட்டில் (29 பிப் 2020):சியாட்டிலில் உள்ள எவரெட் நகரப் பகுதியில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரை கொரோனா COVID-19 வைரஸ் தாக்கியுள்ளதாக அம்மாவட்டச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மேலும், அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் அவர் தொடர்பு கொண்ட மாணவர்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுகாதாரத் துறையின் கண்காணிப்புடன் 14 நாள்கள் வீட்டிலேயே இருப்பார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 2 திங்கள் அன்று உயர்நிலைப் பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம். பள்ளி வளாகத்தை கிருமி நீக்கம் செய்ய எங்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

அதிராம்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

அதிராம்பட்டினம் (09 டிச 2022): அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் வியாழன் அன்று திடீரென கடல் உள் வாங்கியதால் கரையோரம் வாழும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியது. கடந்த கஜா...

கத்தாரில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட டாக்டர்.ஜாகிர் நாயக் நிகழ்ச்சிகள்!

தோஹா (09 டிசம்பர் 2022): பிரபல இஸ்லாமிய மதபோதகர் டாக்டர். ஜாகிர் நாயக், FIFA World Cup 2022 நடந்து வரும் கத்தாருக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும்...

சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு...