விளாடிமிர் புதின் போட்டுக் கொண்ட தடுப்பூசி இதுதானாம்!

1823

மாஸ்கோ (30 ஜூன் 2021): ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போட்டுக் கொண்ட தடுப்பூசி விவரம் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் விளாடிமிர் புதின், அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு டோசுகளையும் போட்டுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டோஸ் மார்ச் மாதத்தில் போடப்பட்டதாகவும், இரண்டாவது டோஸ் ஏப்ரல் மாதத்தில் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிபர் விளாடிமிர் புதின் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோ எதுவும் வெளியிடப்படவில்லை.

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்க முதல் தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.