வாட்ஸ்ஆப் அப்டேட்டிங் திட்டத்தில் திடீர் மாற்றம்!

நியூயார்க்(16 ஜன 2021): வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டிங் கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்துள்ளது.

கடந்த மாதம் வாட்ஸ்ஆப் அப்டேட்டிங்கில் தனி மனித சுதந்திர தலையீடு இருக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டது. இதனை அடுத்து அப்டேட்டிங் புதுப்பிப்பைத் தற்போதைக்குச் செயல்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது.

மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களுக்கு மக்கள் பெருமளவில் மாறுவது வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் வாட்ஸ்ஆப் மீதான தவறான எண்ணங்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தனியுரிமைக் கொள்கை குறித்த குழப்பத்தால் மக்களிடையே பரவிய தவறான தகவல் வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் பயனர்களின் தகவல்கள் எதுவும் ஃபேஸ்புக்கில் பகிரப்படவில்லை என்றும் தனிப்பட்ட செய்திகள் எப்போதும் தனிப்பட்டதாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் தரவைப் பகிரும் முறை புதியதல்ல என்றும் அதை விரிவாக்கத் திட்டமிடவில்லை என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

ஹாட் நியூஸ்:

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல சவூதியில் இலவச விசா தொடக்கம்!

ஜித்தா (31 ஜன 2023): உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல நான்கு நாள் இலவச போக்குவரத்து விசாக்கள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ஃப்ளைனாசின்...