கொரோனாவிலிருந்து மீண்டது எப்படி?? – நடிகர் விஷால் பரபரப்பு தகவல் :வீடியோ!

சென்னை (26 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்டது குறித்து நடிகர் விஷால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் அவரும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையும், அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,”எனது தந்தைக்கு 83 வயதாகிறது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என வந்தது. எனினும் அவரை நான் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அவருடன் வீட்டிலேயே இருந்து அவரை நான் கவனித்துக் கொண்டேன். இதனால் எனக்கும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தன.

என் தந்தை எடுத்துக் கொண்ட மருந்துகளை நானும் எடுத்துக் கொண்டேன். என் மேலாளருக்கும் வந்தது அவரும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொண்டார்.எங்களை காப்பாற்றியது ஆயுர்வேத மருந்துதான். இதை விளம்பரத்திற்காக கூறவில்லை. என் அனுபவத்தை ஒரு மனிதாபிமான அடிப்படையில் பகிர்ந்து கொள்கிறேன். கொரொனாவை பார்த்து யாரும் அச்சப்பட வேண்டாம். வீட்டில் இருங்கள் பயத்தை தவிர்த்து கொரோனாவை எதிர்த்து போராடுவோம். ” என்று தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: