ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (17 ஜூலை,2020): முன்னாள் உலக அழகியும், நடிகர் அமிதாப்பச்சன் மருமகளுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே, அவருடைய கணவருக்கும், மாமனாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், ஐஸ்வர்யா ராயும் அவரது மகளான ஆராத்யா பச்சனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனான நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரிந்திருக்கலாம்!

ஹாட் நியூஸ்: