ராஜாவுக்கு செக் – சினிமா விமர்சனம்: சேரனுக்கு கை கொடுக்குமா?

467

சேரன் நடிப்பில் எப்போதோ எடுத்த படம். ஆனால் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. பிக்பாஸ் பிரபலத்துக்குப் பிறகு சேரன் மீண்டும் களமிறங்கியுள்ளதால் படக்குழு இதனை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) க்ளெய்ன் லெவின் சின்ட்ரோம் என்கிற வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.

மகள் மேல்படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராகுகிறார். வெளிநாட்டிற்கு செல்லும் முன்பு 10 நாட்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குகிறார் சேரன். மறுநாள் வெளிநாட்டிற்கு கிளம்ப உள்ள நிலையில் மகள் கடத்தப்படுகிறார். மகளை கடத்தியது யார் என்று தெரிந்தாலும், எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது சேரனுக்கு தெரியவில்லை.

கடத்தல்காரர்கள் சேரன் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி சூழலை உருவாக்க அதையும் தாண்டி அவர் தன் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்கிறது. மனைவியை பிரிந்தாலே குடிகாரராகத் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளதா என்று தெரியவில்லை. சேரனை குடிகார போலீசாக காட்டியுள்ளார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல நடிகைக்கு கத்தி குத்து - தயாரிப்பாளர் வெறிச்செயல்!

அப்பா, மகள் பாசக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் பெரிதாக ஈர்க்கவில்லை. சேரனின் நடிப்பு அருமையோ அருமை. ஓவர் ஆக்டிங்கே இல்லை. படம் துவங்கியதும் ரொம்ப ஸ்லோவாக செல்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் நெருங்க, நெருங்க தான் சுவாரஸ்யமாக உள்ளது. திரைக்கதையை சொதப்பியிருக்கிறார் இயக்குநர் சாய் ராஜ்குமார்.

ஸ்ருஷ்டி டாங்கே சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். இர்பான் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியே தொடர்ந்தால் வில்லனாக ஒரு பெரிய ரவுண்டு வரலாம். படத்தில் வரும் பயங்கரமான காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஃபீல் பண்ணவில்லை.

சுமார் ரகம்.