2024 தேர்தலை குறி வைத்து முக்கிய தலைவர்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு!

Share this News:

புதுடெல்லி (07 செப் 2022) : பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவும் டெல்லியில் சந்தித்து பேசினர்.

2024 தேர்தலை எப்படி எதிர் கொள்வது என எதிர் காட்சிகள் ஆலோசித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் திங்கள்கிழமை முதல் டெல்லி வந்துள்ளார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக நிதிஷ்குமார் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார்.

திங்கள்கிழமை அவர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி), சீதாராம் யச்சூரி (சிபிஎம்), அரவிந்த் கெஜ்ரிவால் (முதல்வர்) மற்றும் பலரையும் நிதிஷ் குமார் சந்தித்தார்.

பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ், ஆகஸ்ட் மாதம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஆர்ஜேடி ஆதரவுடன் மீண்டும் முதல்வரானது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply