105 வயதில் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பாட்டி!

கொல்லம் (06 பிப் 2020): கேரளாவில் 105 பாட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதித்து பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு, 205 மதிப்பெண் பெற்று அவர் சாதித்து உள்ளார். இதில் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றது கூடுதல் சிறப்பாகும்.

வயது முதுமை காரணமாக தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார் பகீரதி அம்மா.. இதனால் கணிதம் மற்றும் மலையாளம் ஆகிய 3 பாட தேர்வு எழுதுவதற்கு 3 நாட்களை எடுத்துக்கொண்டதாகவும் எழுத்தறிவு இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

105 வயதில் சாதித்த இந்த பாட்டிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...