ஹஜ் கமிட்டி தலைவர் பதவி – பாஜகவிற்கு காங்கிரஸ் உதவியதா?

புதுடெல்லி (17 பிப் 2023): காங்கிரஸ் உதவியின் மூலம் பாஜக தலைவர் கவுசர் ஜஹான் டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவரானார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, காங்கிரஸ் உறுப்பினரை குழுவில் நியமித்ததன் மூலம் அவமானகரமான தலையீட்டை செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் சார்பாக நாஜியா டேனிஷ் பரிந்துரைக்கப்பட்டார். இறுதியாக அவருக்கு வாக்களிக்காமல் விலகி பாஜக பிரதிநிதியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஐந்தில் மூன்று வாக்குகள் பெற்று கௌசர் ஜஹான் ஹஜ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கௌசர் தனது சொந்த வக்கு மற்றும், பிஜேபி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் மற்றும் பாஜகவால் பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் அறிஞர் முகமது சாத் ஆகியோரின் வாக்குகளைப் பெற்றதால் வெற்றி பெற்றார்.

ஆம் ஆத்மி வேட்பாளர் இரண்டு ஆம் ஆத்மி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் பிரதிநிதியும் வாக்களித்திருந்தால் இருவருக்கும் தலா மூன்று வாக்குகள் கிடைத்திருக்கும். பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக காங்கிரஸ் வேண்டுமென்றே வாக்களிக்காமல் புறக்கணித்ததாக ஆம் ஆத்மி குற்றம் சட்டியுள்ளது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...