பாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்!

Share this News:

புதுடெல்லி (26 செப் 2020): பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவராக கேரளாவை
சேர்ந்த அப்துல்லா குட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய அளவிலான புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது. பாஜக முதல் முறையாக 12 தேசிய துணைத் தலைவர்களை நியமித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது.

புதிய அணியில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி சூர்யா பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், பி முரளிதர் ராவ், அனில் ஜெயின், சூரஜ் பாண்டே ஆகியோருக்கு பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எட்டு புதிய தேசிய பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அணியில் தேசிய செய்தித் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடக பொறுப்பாளராக அனில் பலூனி (Anil Baluni) நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கட்சியின் பொறுப்பாளர்களின் புதியப் பட்டியலை அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply