அர்ணாப் கோசுவாமிக்கு பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் ரூ .19 லட்சம் அபராதம்!

Share this News:

புதுடெல்லி (23 டிச 2020): ரிபப்ளிக் டிவி க்கு பிரிட்டிஷ் அரசு 2000 பவுண்ட்ஸ் (சுமார் 19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

குடியரசு டிவி, அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமானது, இதில் கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று ஒளிபரப்பப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு, அநாகரீகமான மொழி மற்றும் தவறான மற்றும் கேவலமான நடைமுறைக்காக, இங்கிலாந்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் 19 19 பவுண்ட்ஸ் (19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

சர்சைக்குரிய அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்களை அவமதித்ததாகவும், நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தில் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இருந்ததாகவும் பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் அர்ணாப் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதன் விளையாட்டு வீரர்கள் கூட தீவிரவாதிகள் என்பதாக அர்னாப் பேசியதாக தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரிபப்ளிக் டிவியின் கேவலமான அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.


Share this News:

Leave a Reply