பாஜகவின் வெற்றிக்கு உதவுவதே உவைஸிதான் – பாஜக எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (14 ஜன 2021): பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியே கரணம் என்பதாக, பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவின் வெற்றியை தட்டிப் பறித்தது உவைஸியே என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் சாக்ஷி மகாராஜ் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வாங்க தேர்தலிலும் உவைஸி பாஜகவின் வெற்றிக்கு உதவுவார். என்பதாக சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சாக்ஷி மகாராஜ் தெரிவிக்கையில் ” உவைசியின் உதவியால் உ.பி. உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதேபோல மேற்கு வங்க தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் . ”என்று சாக்ஷி மகாராஜ் கூறினார்.

மேற்கு வங்கத்தில் 110 சட்டமன்ற இடங்களை தீர்மானிப்பதில் முஸ்லிம்கள் சமூகம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.. இந்த பகுதிகளில் கவனம் செலுத்துவதே உவைசியின் திட்டம். உவைசியை இயக்குவது பாஜகவே எனப்தாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: