முஸ்லிம்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் – பாஜக எச்சரிக்கை!

புதுடெல்லி (08 பிப் 2020): முஸ்லிம்கள் அவர்களது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முஸ்லிம் பெண்கள் கையில் வாக்காளர் அட்டையுடன் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, ‘நீங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் இது மீண்டும் தேவைப்படும்’ என்பதாக வெறுப்பூட்டும் பதிவை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது.

நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவின் இதுபோன்ற எச்சரிக்கைகள் பொதுமக்களுக்கு பாஜகவின் மீது மேலும் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதற்கிடையே டெல்லி சட்டசபை தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக படுதோல்வி அடையும் என்றும், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...